இங்கிலாந்து தொடர்: புதிய கேப்டன்களுடன் ஆஸி. அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடர்: புதிய கேப்டன்களுடன் ஆஸி. அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. பின்னர் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானுடனான முத்தரப்பு தொடரில் பங்கேற்கிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிகளுக்கான புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்மித் தடைக்குப் பின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட டிம் பெய்ன் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுபோல டி20 மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கு துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் இது நிரந்தரமல்ல எனவும், ஒருநாள் அணிக்கான நிரந்தர கேப்டன் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து தொடர் ஒருநாள் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணி மற்றும் டி20 போட்டிக்கான 14 பேர் கொண்ட அணி வீரர்களின் முழு விவரம் பின்வருமாறு:

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:

டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச் (துணைக் கேப்டன்), ஆஷ்டன் ஆகர், ஆலெக்ஸ் கேரி, ஜாஷ் ஹாஸில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன், கிளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி'ஆர்கி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை.

ஆஸ்திரேலிய டி20 அணி:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆலெக்ஸ் கேரி (கேப்டன் விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் ஆகர், டிராவிஸ் ஹெட், நிக் மேடின்சன், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி'ஆர்கி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்வெப்சன், ஜாக் வில்டர்முத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com