ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா

ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது கொல்கத்தா.கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 49-வது ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தா
ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா

ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது கொல்கத்தா.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 49-வது ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் திரிபாதி, ஜோஸ்பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். இதனால் 4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் அணி 60 ரன்களை குவித்தது. திரிபாதி 27, ரஹானே 11, பட்லர் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்
பின்னர் ஆட வந்த சஞ்சு சாம்சன் 12, ஸ்டுவர்ட் பின்னி 1, கெளதம் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது 13 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 103 ரன்களுடன் பஞ்சாப் திணறிக் கொண்டிருந்தது.
பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களுக்கு குல்தீப் யாதவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐஷ் சோதி வெறும் 1 ரன்னிலும், ஆர்ச்சர் 6 ரன்னிலும் வெளியேறினர். இறுதி வரை அணியின் ஸ்கோரை உயர்த்த போராடிய உனதிகட் 26 ரன்களுக்கு பிரசித் பந்தில் போல்டானார்.
19 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் 142 ரன்களை எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டையும், பிரசித், ரஸ்ஸல் தலா 2 விக்கெட்டையும், நரைன், மவி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சுனில் நரைன், கிறிஸ் லீன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அடித்து ஆடிய போதிலும், நரைன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். லீன் 45, உத்தப்பா 4, நிதிஷ் ராணா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களையே எடுத்திருந்தது.
கேப்டன் தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரியுடன் 35 ரன்களுடனும், ரஸ்ஸல் 11 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
18 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 145 ரன்களை எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டையும், சோதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ள கொல்கத்தா, புள்ளிகள் பட்டியலிலும் 3-வது இடத்துக்கு முன்னேறியது. 

இன்றைய ஆட்டம்

மும்பை-பஞ்சாப்.
இடம்: மும்பை.
நேரம்: இரவு 8.00.
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

புள்ளிகள் பட்டியல் 

அணிகள் ஆட்டம் வெற்றி தோல்வி புள்ளிகள்

ஹைதராபாத் 12 9 3 18
சென்னை 12 8 4 16
கொல்கத்தா 13 7 6 14
ராஜஸ்தான் 13 6 7 12
பஞ்சாப் 12 6 6 12
மும்பை 12 5 7 10
பெங்களூரு 12 5 7 10
டெல்லி 12 3 9 6

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com