இன்று முதலாவது மகளிர் டி 20 கிரிக்கெட் காட்சி போட்டி

இந்திய மற்றும் அயல்நாட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் டி 20 காட்சிப் போட்டி மும்பையில் செவ்வாய்க்கிழமை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்துக்கு முன்னர் நடைபெறுகிறது.

இந்திய மற்றும் அயல்நாட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் டி 20 காட்சிப் போட்டி மும்பையில் செவ்வாய்க்கிழமை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்துக்கு முன்னர் நடைபெறுகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மேலும் வலிமையான இங்கிலாந்து, ஆஸி அணிகளையும் பல்வேறு போட்டிகளில் வென்றது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மகளிர் சார்பிலும் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே மகளிர் டி 20 போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் காட்சிப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஐபிஎல் டிரப்லைசர்ஸ் மற்றும் ஐபிஎல் சூப்பர்நோவா என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிரப்லைசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர்நோவாவுக்கு ஹர்மன்பிரீத் கெüரும் கேப்டன்களாக செயல்படுவர். மேலும் முன்னணி வீராங்கனைகளான சூசி பேட்ஸ், அலிஸா ஹீலி, பெத் மூனி, எல்சிபெரி, மேகன் ஷூல்ட்ஸ், டேனியல் வயாட் போன்ற அயல்நாட்டு வீராங்களையும் பங்கேற்கின்றனர்.
ஸ்மிருதி மந்தான கூறுகையில், மகளிர் கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சிப் போட்டி மூலம் மகளிர் கிரிக்கெட் மேலும் ஊக்கம் பெறும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்துக்காக காத்துள்ளோம். மகளிர் ஐபிஎல் போட்டிகளில் 4 அணிகள் இடம் பெறும் வாய்ப்புள்ளது என்றார்.
சூசி பேட்ஸ் கூறுகையில்: மகளிர் கிரிக்கெட் லீக் போட்டி என்பது எதிர்காலத்தில் நடைபெறும் என்பது நிதர்சனம். இது காட்சிப் போட்டியாக இருந்தாலும் அனைவரையும் கவரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com