மகளிர் டி 20 கிரிக்கெட் காட்சி போட்டி: சூப்பர் நோவாஸ் வெற்றி

மும்பையில் நடைபெற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் டிரையல்பிளேசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணி வென்றது.
மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் வென்ற சூப்பர் நோவாஸ் அணியினர்.
மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் வென்ற சூப்பர் நோவாஸ் அணியினர்.

மும்பையில் நடைபெற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் டிரையல்பிளேசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணி வென்றது.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டிகளை அறிமுகம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் இந்திய மற்றும் ஆஸி., இங்கிலாந்து, நியூஸி. நாடுகளைச் சேர்ந்த பிரபல வீராங்கனைகள் அடங்கிய 2 அணிகள் அமைக்கப்பட்டன. டிரையல்பிளேசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர் நோவாஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கெüரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.
மும்பையில் ஹைதராபாத்-சென்னை அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்துக்கு முன்பு மகளிர் காட்சிப் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, எல்சி பெரி, மேக் லேனிங், சூசி பேட்ஸ், டேனியல் வயாட். உள்ளிட்ட பிரபல வீராங்கனைகள் இரு அணிகளும் இடம் பெற்றிருந்தனர். 
முதலில் ஆடிய டிரையர்பிளேசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை குவித்தது. சூசி பேட்ஸ், 37, ஜெùமியா 25, தீப்தி சர்மா 21 ஆகியோர் சிறப்பாக ஆடினார். சூப்பர் நோவா தரப்பில் மேகன் சூட், எல்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 130 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய சூப்பர் நோவா அணி தரப்பில் மிதாலி ராஜ் 22, டேனியல் வயாட் 24 ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். பின்னர் சோபி 20, ஹர்மன்பிரீத் 21, ஆகியோர் தொடர்ந்து ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்த சூப்பர் நோவாஸ் அணி வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com