கோவையில் அகில இந்திய கூடைப்பந்து: நாளை தொடக்கம்

கோவையில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 53-ஆவது ஆடவர் கூடைப்பந்து, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை (மே 26) தொடங்குகின்றன.

கோவையில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 53-ஆவது ஆடவர் கூடைப்பந்து, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை (மே 26) தொடங்குகின்றன.
இது குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர் டி. பழனிசாமி, பொறுப்புச் செயலர் எஸ். சுரேஷ், பொது மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: ஆடவர் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள பஞ்சாப் போலீஸ், தில்லி இந்திய விமானப் படை, சென்னை வருமான வரி, சென்னை அரைஸ் ஸ்டீல், தில்லி இந்தியன் ரயில்வே, பெங்களூரு ஏ.சி.எஸ்., தில்லி வருமான வரி அணி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
பெண்களுக்கான பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே, கேரள காவல் துறை, ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், மைசூரு ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், கேரள மின்வாரியம், தமிழ்நாடு ஜூனியர்ஸ், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com