விராட் கோலிக்கு கழுத்தில் காயம் 

தொடர் போட்டிகளால் கழுத்தில் காயமடைந்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, கவுண்டி அணியான சர்ரே சார்பில் பங்கேற்று விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
விராட் கோலிக்கு கழுத்தில் காயம் 

தொடர் போட்டிகளால் கழுத்தில் காயமடைந்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, கவுண்டி அணியான சர்ரே சார்பில் பங்கேற்று விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் செயலாளர் அமிதாப் செளத்ரி செய்திக் குறிப்பில் கூறியள்ளதாவது:
ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 29 வயதான கோலி விளையாடி வருகிறார். கடந்த 17-ஆம் தேதி ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. 
மேலும் ஓய்வின்றி விளையாடுவதால் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது உடல்நிலை குறித்து மும்பையில் முடநீக்கியல் நிபுணரிடம் மருத்துவ பரிசோதனை செய்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர், கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் கவுண்டி போட்டியில் விளையாடக் கூடாது என அறிவுறுத்தி உள்ளார். இதனால் சர்ரே அணிக்கான போட்டிகளில் கோலி விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இங்கிலாந்தில் பல்வேறு போட்டிகளில் விளையாட இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதில் நன்றாக விளையாடுவதற்காக கவுண்டி போட்டியில் பங்கேற்க கோலி முடிவு செய்திருந்தார்.
ஆனால் அவரது காயம் கோலியின் எண்ணத்தை பாதிப்பதாக அமைந்துள்ளது. இதனால் கவுண்டி போட்டியில் கோலி பங்கேற்கக் கூடாது என பிசிசிû மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. அவருக்கு 3 வாரங்கள் பிசிசிஐ குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படும். பின்னர் ஜூன் 15-ஆம் தேதி முழு உடல்தகுதி சோதனை நடத்தப்படும். ஜூலை மாதம் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு கோலி தகுதி பெற்று விடுவார் என நம்புகிறோம் என்றார் செளத்ரி.
வரும் ஜூலை 3-ஆம் தேதி டி 20 போட்டிகளுடன் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. கோலி தொடர்ந்து 9 டெஸ்ட், 29 ஒரு நாள் போட்டிகள், 9 டி 20 போட்டிகள், 14 ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருவதால் அவரது உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
கவுண்டி போட்டிக்காக அவர் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில்லை என முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com