கனடா டி 20 லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பு

பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக தடை விதிக்கப்பட்ட ஆஸி. கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கனடா நாட்டின் டி 20 லீக் போட்டிகளில் பங்கேற்கிறார்.
கனடா டி 20 லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பு

பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக தடை விதிக்கப்பட்ட ஆஸி. கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கனடா நாட்டின் டி 20 லீக் போட்டிகளில் பங்கேற்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, பந்தை சேதப்படுத்தியதாக ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தி மூவருக்கும் ஓராண்டு தடை விதித்தது. இந்நிலையில் மூவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
இதையடுத்து உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாட சிஏ அமைப்பு அனுமதி தந்துள்ளது. இந்நிலையில் கனடாவில் புதிதாக தொடங்கவுள்ள டி 20 லீக் போட்டியில் ஸ்மித் விளையாடுகிறார். கிறிஸ் கெயில், ரஸ்ஸல், ஷாகித் அப்ரிடி, ஆகியோரும் அவருடன் விளையாடுகின்றனர். வரும் ஜூன் 28-ஆம் தேதி முதல் 6 அணிகள் பங்கேற்கும் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 16-இல் நடக்கிறது என கிரிக்கெட் கனடா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com