பல்வேறு நாடுகளின் சீருடைகளை அணிந்து ரஷிய தேசிய அணி வரவேற்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-இல் பங்கேற்க உள்ள 31 நாடுகளின் சீருடைகளை அணிந்து ரஷிய தேசிய அணி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை 2018 போட்டிக்கு வரும் நாடுகளின் அணிகளை வரவேற்கும் வகையில் அவர்களது சீருடைகளை அணிந்திருந்த ரஷிய தேசிய அணி வீரர்கள்.
உலகக் கோப்பை 2018 போட்டிக்கு வரும் நாடுகளின் அணிகளை வரவேற்கும் வகையில் அவர்களது சீருடைகளை அணிந்திருந்த ரஷிய தேசிய அணி வீரர்கள்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-இல் பங்கேற்க உள்ள 31 நாடுகளின் சீருடைகளை அணிந்து ரஷிய தேசிய அணி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகள் ரஷியாவில் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடக்கிறது. தகுதிப் போட்டிகள் மூலம் 31 நாடுகள் இதற்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் ரஷியாவும் தகுதி பெற்றுள்ளது.
4 அணிகள் ஒரு பிரிவு என ஏ முதல் எச் வரை 8 பிரிவுகளாக 32 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போட்டியில் பங்கேற்க உள்ள அணிகளின் பட்டியலை பல்வேறு நாடுகளின் சம்மேளனங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் 31 நாடுகளின் வீரர்கள் அணியவுள்ள சீருடைகளை அணிந்து ரஷிய தேசிய அணியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரஷியாவில் உலக் கோப்பை போட்டிகள் நடக்கும் போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அளிக்கப்படவுள்ள உபசரிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நடப்புச் சாம்பியன் ஜெர்மனியின் சீருடையை அணிந்த ரஷிய கோல் கீப்பர் இகோர் அகின்பீவ் கூறுகையில்: போட்டியில் பங்கேற்க வரும் பல்வேறு அணிகளை வரவேற்க ரஷியா 100 சதவீதம் தயாராகி விட்டது. ஏற்கெனவே பல முக்கிய போட்டிகளை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு வீரர், பயிற்சியாளர், ரசிகர்கள் ரஷியாவின் உபசரிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம். 
தற்காப்பு வீரர் செர்ஜி இனாஷெவிச் கூறுகையில், கோடைக்காலமாக இருந்தாலும், தற்போது பருவநிலை சிறப்பாக உள்ளது. மக்களும் நட்புணர்வுடன் பழகுவர். உலகம் முழுவதும் இருந்து வரும் ரசிகர்கள் ரஷிய மக்களின் தோழமையை பாராட்டுவர் என்றார்.
கடந்த பல மாதங்கள் கடும் உழைப்பினால் உலகக் கோப்பை போட்டிகளை ரஷியா சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளின் அணிகளை வரவேற்கும் வகையில் அந்நாட்டு தேசிய அணியினர் இவ்வாறு சீருடைகளை அணிந்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரஷிய அணியின் சீருடையை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டானிஸ்லாவ் செர்ஷ்சோவ் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்கோவின் லூசினிக்கி விளையாட்டரங்கில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ரஷியா-சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com