1930 முதலாவது உலகக் கோப்பை கால்பந்து: உருகுவே சாம்பியன்

உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்படும் விளையாட்டுகளில் முதலிடம் பெற்றுள்ளது கால்பந்து.
1930 முதலாவது உலகக் கோப்பை கால்பந்து: உருகுவே சாம்பியன்

உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்படும் விளையாட்டுகளில் முதலிடம் பெற்றுள்ளது கால்பந்து. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பது வழக்கம்.
 முதல் உலகக் கோப்பை போட்டி கடந்த 1930-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடான உருகுவேயில் நடைபெற்றது.
 சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) போட்டியை நடத்த அந்நாட்டை தேர்வு செய்தது.
 1930-இல் ஜூலை 13 முதல் 30-ஆம் தேதி வரை 18 நாள்கள் நடந்த போட்டியில் மொத்தம் 13 நாடுகள் (தென் அமெரிக்காவில் இருந்து 7, ஐரோப்பாவில் இருந்து 4, வட அமெரிக்காவில் இருந்து 2) அணிகள் பங்கேற்றன. உலக கோப்பை போட்டிக்காக தலைநகர் மாண்டேவிடியோவில் 90000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட விளையாட்டரங்கம் கட்டப்பட்டது.
 தென் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதில் இருந்த சிரமமான சூழலை கருதி ஐரோப்பி நாடுகள் பங்கேற்க தயக்கம் காட்டின.
 நீண்ட நாள் கப்பல் பயணத்தை வீரர்கள் விரும்பவில்லை. இதையடுத்து பிஃபாவின் தலைவர் ஜூலியஸ் ரிமெட் தலையீட்டால் பெல்ஜியம், ருமேனியா, பிரான்ஸ், யுகோலேஸ்வியா அணிகள் பங்கேற்றன.
 இதையடுத்து 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின் முதலிடம் பெற்ற ஆர்ஜென்டீனா, உருகுவே, யுஎஸ்ஏ, யுகோஸ்லேவியா உள்ளிட்டவை அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
 இறுதி ஆட்டத்துக்கு ஆர்ஜென்டீனாவும், போட்டியை நடத்திய உருகுவேயும் முன்னேறின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்று முதலாவது உலக கோப்பை சாம்பியன் ஆனது. இப்போட்டியை 68, 346 ரசிகர்கள் கண்டு களித்தனர்.
 மொத்தம் அடிக்கப்பட்ட கோல்கள்-70.
 பார்வையாளர் வருகை: 5,90,549
 (32,808 ஒவ்வொரு ஆட்ட சராசரி).
 அதிக கோல் அடித்தவர்:
 கியுலர்மோ ஸ்டேபிள் (9).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com