ஐபிஎல் கோப்பை யாருக்கு? இன்று சென்னை-ஹைதராபாத் பலப்பரீட்சை

கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 2018 சீசனில் மொத்தம் 61 ஆட்டங்கள் இடம் பெற்றன.
ஐபிஎல் கோப்பை யாருக்கு? இன்று சென்னை-ஹைதராபாத் பலப்பரீட்சை

கிரிக்கெட் திருவிழா
கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 2018 சீசனில் மொத்தம் 61 ஆட்டங்கள் இடம் பெற்றன. கொல்கத்தா, புணே, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், இந்தூர், தில்லி என பல்வேறு நகரங்களில் நடந்த ஆட்டங்களில் தில்லி டேர் டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இண்டியன்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் என 8 அணிகள் பங்கேற்றன.
பிளே ஆஃப் சுற்றில் 4 அணிகள்
லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடப்புச் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ், பெங்களூரு அணிகள் கடைசி இடத்தில் இருந்த தில்லியிடம் பெற்ற தோல்வியால் வெளியேற நேர்ந்தது.
தகுதி சுற்று ஆட்டங்கள்
மும்பையில் நடந்த முதல் தகுதி ஆட்டத்தில் சென்னை அணி ஹைதராபாத்தை வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தாவில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்றது கொல்கத்தா. பின்னர் நடைபெற்ற இரண்டாவது தகுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி எழுச்சியுடன் ஆடி, கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.
சென்னை-ஹைதராபாத் மோதல்
இறுதி ஆட்டத்தில் சென்னை-ஹைதராபாத் அணிகள் மீண்டும் சந்திக்கின்றன. ஏற்கெனவே நிகழாண்டு ஐபிஎல் 2018 சீசனில் சென்னை அணியிடம் ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதற்கெல்லாம் சேர்ந்தார் போல் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சென்னையை பழிதீர்க்குமா ஹைதராபாத் என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
வலுவான ஹைதராபாத் பந்துவீச்சு
புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சில் வலுவாக காணப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அபார பந்துவீச்சால் எதிரணிகள் நிலைகுலையும் நிலை உள்ளது. அதே நேரத்தில் புவனேஸ்வர்குமார், சித்தார்த் கெளல், கார்லோஸ் பிராத்வெய்ட் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
கவலை தரும் பேட்டிங்
சீசன் தொடக்கத்தில் வலுவாக இருந்த பேட்டிங் போகப் போக வலுகுன்றி விட்டது. அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸனையே அந்த அணி சார்ந்து காணப்படுகிறது. 
அதே நேரத்தில் ஷிகர் தவன், மணிஷ் பாண்டே, சாஹா, யூசுப் பதான் ஆகியோர் பேட்டிங் கவலை தரும் வகையில் உள்ளது. ரஷீத் கானின் பந்துவீச்சு, பேட்டிங்கால் ஹைதராபாத் இறுதியில் நுழைந்தது. அதே வேளையில் ரஷீத் கான், கார்லோஸ் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக விளங்குவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
7-வது முறையாக இறுதியில் நுழையும் சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளது. வாட்சன், டு பிளெஸிஸ், அம்பட்டி ராயுடு, தோனி, பிராவோ, சுரேஷ் ரெய்னா போன்றோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர். 
பந்துவீச்சில் பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் சிங், தாகுர் போன்றவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். நேரடியாக இறுதியில் நுழைந்ததால் சென்ûû அணிக்கு 4 நாள்கள் பூரண ஓய்வு கிடைத்துள்ளது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதி ஆட்டம் அனல் பறக்கும் ஆட்டமாக அமையும். சென்னை அணி ஏற்கெனவே 2010, 2011-இலும், ஹைதராபாத் 2016-இலும் ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. 
ஐபிஎல் கிரிக்கெட் 2018 சாம்பியன் பட்டத்தை வெல்வது சென்னையா அல்லது ஹைதராபாத்தா என ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிந்து விடும்.
ஐபிஎல் கிரிக்கெட் 2018 சிறப்பு அம்சங்கள்
பேட்டிங்
ஆரஞ்ச் தொப்பி
கேன் வில்லியம்ஸன் 
(ஹைதராபாத்), 
688 ரன்கள்.
அதிக சிக்ஸர்கள்
ரிஷப் பந்த் (தில்லி) 37.
அதிகபட்ச ஸ்கோர்
ரிஷப் பந்த் (தில்லி) 128.
அதிக சராசரி
கிருஷ்ணப்ப கெளதம் 
(ராஜஸ்தான்) 196.87.
அதிக பவுண்டரிகள்
பந்துவீச்சு
ரிஷப் பந்த் (தில்லி) 68.
அதிக விக்கெட் 
(பர்ப்பிள் தொப்பி)
ஆன்ட்ரு டை ( பஞ்சாப்) 24.
சிறப்பான பந்துவீச்சு
அங்கித் ராஜ்புத் (பஞ்சாப்) 5/14.
சிறந்த பந்துவீச்சு சராசரி
நிதிஷ் ராணா (கொல்கத்தா) 11.00.
சிறந்த எகானமி பந்துவீச்சு
ஐஷ் சோதி (ராஜஸ்தான்) 5.86
மொத்த சிக்ஸர்கள்: 853. மொத்த ரன்கள்: 19542.
சிறந்த மைதானமாக ஈடன் கார்டன் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் 2018 சீசனின் சிறந்த மைதானமாக கொல்கத்தா ஈடன் 
கார்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஆட்டம்
சென்னை-ஹைதராபாத்
நேரம்: இரவு 7.00.
இடம்: மும்பை வான்கடே மைதானம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com