2022 உலகக் கோப்பை கால்பந்து அணிகளை வேறு நாடுகளில் தங்க வைக்க கத்தார் திட்டம்

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வரும் அணிகளை வேறு நாடுகளில் தங்க வைக்க கத்தார் திட்டமிட்டுள்ளது.
2022 உலகக் கோப்பை கால்பந்து அணிகளை வேறு நாடுகளில் தங்க வைக்க கத்தார் திட்டம்


2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வரும் அணிகளை வேறு நாடுகளில் தங்க வைக்க கத்தார் திட்டமிட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான கத்தாரில் வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு உலகக் கோப்பை அமைப்புக் குழு தீவிரமாக செய்து வருகிறது. 
இந்நிலையில் போட்டியில் ஆட வரும் பல்வேறு நாட்டு அணிகளை வேறு நாடுகளில் தங்க வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஈரானும் சில அணிகள் தங்கள் நாட்டில் தங்க வைத்துக் கொள்ள முன்வந்துள்ளது. இதுதொடர்பாக அமைப்புக் குழுத் தலைவர் ஹாசன் அல் தவாடி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பல்வேறு நாடுகளில் இருந்து கால்பந்து அணிகளை தங்க வைத்துக் கொள்வது தொடர்பாக ஆலோசனைகள் வந்துள்ளன. இது போட்டியின் ஒரு பகுதி தான். இதில் பிஃபாவுடன் கலந்து முடிவெடுக்கப்படும். இத்திட்டம் பரிசீலனையில் தான் உள்ளது. கத்தாரின் அண்டை நாடுகள் தங்கள் நாட்டு பொதுமக்கள், உலகக் கோப்பை காண்பதற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
பிஃபாவின் திட்டப்படி கால்பந்து அணிகள் 48 ஆக அதிகரிக்கப்படுமா என கேட்டபோது, அமைப்புக் குழு 32 அணிகளுக்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com