சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு!

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் இடம்பெற்றிருந்த வீரர்களுள் 22 பேரை தக்கவைத்து வெறும் 3 வீரர்களை மட்டும் விடுவித்துள்ளது. 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு!

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் இடம்பெற்றிருந்த வீரர்களுள் 22 பேரை தக்கவைத்து வெறும் 3 வீரர்களை மட்டும் விடுவித்துள்ளது. 

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதனால், அடுத்த ஐபிஎல் சீசனுக்கு தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவிடம் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும் என்று ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அதன்படி, கடந்த சீசனில் விளையாடிய வீரர்களுள் 22 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், இளம் இந்திய வீரர்களான கனிஷ்க் சேத் மற்றும் க்ஷி்திஸ் சர்மா ஆகிய 3 வீரர்களை விடுவித்துள்ளது. இதில், மார்க் வுட் சென்னை அணிக்காக கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். கனிஷ்க் மற்றும் க்ஷி்திஸ் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.    

கடந்த சீசனில் காயமடைந்த ஜாதவுக்கு பதிலாக இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் டேவிட் வில்லே தேர்வு செய்யப்பட்டார். அவரை, சென்னை அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்கும் தக்கவைத்துள்ளது. கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்ற ஜாதவ் அணியில் தொடர்ந்து நீடிக்கிறார். காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட பங்கேற்காத நியூஸிலாந்து ஆல்-ரௌண்டர் மிட்செல் சான்ட்னர் வரும் சீசனில் அணியுடன் இணைவார் என்று சென்னை அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த மாதம் வீரர்கள் ஏலம் வரவுள்ள நிலையில், சென்னை அணியிடம் தற்போது ரூ.8.5 கோடி (கடந்த சீசன் தொகை ரூ.6.5 கோடி. நடப்பு சீசனுக்காக ரூ.2 கோடி கூடுதலாக வழங்கப்பட்டது) கையிருப்பில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com