ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸி. அணியால் இந்தியாவுக்கு சாதகம்

ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸி. அணி, கோலி, ரோஹித் ஆகியோர் இல்லாத இந்தியாவைப் போல் உள்ளது என இந்றதிய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸி. அணியால் இந்தியாவுக்கு சாதகம்

ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸி. அணி, கோலி, ரோஹித் ஆகியோர் இல்லாத இந்தியாவைப் போல் உள்ளது என இந்றதிய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸி.க்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்நிலையில் கங்குலி வியாழக்கிழமை கூறியதாவது: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத ஆஸி. அணி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாத இந்திய அணி போல் உள்ளது. இது ஒரு பெரிய தாக்கமாக இருக்கும். ஆஸி.யில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.
இந்திய அணி தற்போது சிறந்த பேட்டிங், பெளலிங்கை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் அந்நாட்டு பெளலர்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் 20 விக்கெட்டை வீழ்த்தினர். ஆஸி.யை தற்போது பலர் வலுகுறைந்த அணியாக கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு எண்ணக்கூடாது.
மேற்கு வங்க ரஞ்சி அணியில் விளையாட முகமது சமி விருப்பம் தெரிவித்துள்ளார். இது வரவேற்புக்குரியது என்றார்.
இதற்கிடையே ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் ஆகியோர் மீதான தடையை விலக்க ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கோரியுள்ளது. ஆனால் சிஏ இதில் இறுதி முடிவெடுக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com