உலக மகளிர் குத்துச்சண்டை: நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் மனிஷாமெளன்

ஏஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் இந்திய வீராங்கனை மனிஷாமெளன். அதே நேரத்தில் மூத்த வீராங்கனை
உலக மகளிர் குத்துச்சண்டை: நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் மனிஷாமெளன்

ஏஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் இந்திய வீராங்கனை மனிஷாமெளன். அதே நேரத்தில் மூத்த வீராங்கனை மேரிகோம், லவ்லினா, பாக்யபதி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 72 நாடுகளில் இருந்து 300 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 5 முறை சாம்பியன் மேரி கோம் தலைமையில் 10 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் மனிஷா மெளன் 54 கிலோ பிரிவில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் டினா ஸாலமேனை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 
ஹரியாணாவைச் சேர்ந்த மனிஷா ஏற்கெனவே டினாவை போலந்து குத்துசண்டை போட்டியில் வென்றுள்ளார். 2016 போட்டியில்  வெள்ளி வென்ற பல்கேரியாவின் ஸ்டோக்கியாவை காலிறுதியில் எதிர்கொள்கிறார் மனிஷா.
மற்றொரு வீராங்கனை லவ்லினா போரோகையன் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் 2014 உலக சாம்பியன் பனாமாவின் அதேய்னா பைலனை
வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆஸி.யின் ஸ்காட் கே பிரான்ஸûஸ காலிறுதியில் எதிர்கொள்கிறார் லவ்லினா.
மகளிர் 81 கிலோ பிரிவில் இந்தியாவின் பாக்யபதி கச்சாரி 4-1 என்ற புள்ளிக்கணக்கில் ஜெர்மனியின் ஐரீனா நிகோலெட்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஜெர்மனி வீராங்கனைக்கு உயரம் சாதகமாக இருந்தபோதிலும் சாதுர்யமாக போராடி வீழ்த்தினார் பாக்யபதி.

மேரி கோம் அபாரம்:

6-ஆவது முறை உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் உள்ள மேரி கோம், 48 கிலோ பிரிவில் கஜகஸ்தானின் அய்க்ரிம் கஸ்ஸனெயாவாவை  5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் அவர் சீனாவின் யு வூவை எதிர்கொள்கிறார்.

சரிதா தோல்வி:

60 கிலோ லைட்வெயிட் எடைப்பிரிவில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்ட்ட சரிதாதேவி 2-3 என்ற புள்ளிக்கணக்கில் அயர்லாந்து வீராங்கனை கெல்லி ஹாரிங்டனிடம் வீழ்ந்தார். உலக குத்துச்சண்டையில் இந்தியா பெறும் முதல் தோல்வி இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com