ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்கள்: ஆட்டங்கள் தொடங்கும் நேரங்கள் என்ன?

வழக்கமான பணி நேரங்களை முடித்து வீட்டுக்கு வந்து  ஐபிஎல் மற்றும் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள், டி20 ஆட்டங்கள்போல இரவு நேரத்தில்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்கள்: ஆட்டங்கள் தொடங்கும் நேரங்கள் என்ன?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு 3 டி20, 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. நாளை முதல் டி20 தொடர் தொடங்குகிறது.

நவம்பர் 21, 23, 25 தேதிகள் நடைபெறவுள்ள டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 1.20 மணிக்குத் தொடங்கவுள்ளது. 

டிசம்பர் 6 முதல் நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. அடிலெய்டில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் இந்திய நேரம் காலை 5.30 மணிக்கும் 2-வது டெஸ்ட் காலை 7.50 மணிக்கும் 3-வது, 4-வது டெஸ்ட்டுகள் காலை 5 மணிக்கும் தொடங்கவுள்ளன. ஜனவரி 7 அன்று டெஸ்ட் தொடர் நிறைவுபெறுகிறது.

ஜனவரி 12 முதல் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. முதல் மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7.50 மணிக்கும் 2-வது ஆட்டம் காலை 8.50 மணிக்கும் தொடங்கவுள்ளன.

வழக்கமான பணி நேரங்களை முடித்து வீட்டுக்கு வந்து  ஐபிஎல் மற்றும் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள், டி20 ஆட்டங்கள்போல இரவு நேரத்தில் இந்த ஆட்டங்களைக் காணமுடியாது. எல்லாமே மாலை வேளையுடன் முடிந்துவிடும். 

டி20 தொடர் (இந்திய நேரங்கள்)

முதல் டி20: மதியம் 1.20 மணி
2-வது டி20: மதியம் 1.20 மணி
3-வது டி20: மதியம் 1.20 மணி

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: காலை 5.30 மணி
2-வது டெஸ்ட்: காலை 7.50 மணி
3-வது டெஸ்ட்: காலை 5 மணி
4-வது டெஸ்ட்: காலை 5 மணி

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: காலை 7.50 மணி
2-வது ஒருநாள்: காலை 8.50 மணி
3-வது ஒருநாள்: காலை 7.50 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com