முதல் டெஸ்ட்: 4 ரன்களில் நியூஸிலாந்து த்ரில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 153 ரன்களையும், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 227 ரன்களையும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்கில் நியூஸி அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 249 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
அக்ஸர் பட்டேல் அபார பந்துவீச்சு: ஆனால் நியூஸி. சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேலின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாக். அணி சுருண்டது.
இமாம் உல் ஹக் 27, மொகமது ஹஃபீஸ் 10, ஹரிஸ் சோஹைல் 4, பாபர் ஆஸம் 13, கேப்டன் சர்ப்ராஸ் அகமது 3 என சொற்ப ரன்களிலும், பிலால் ஆசிப், யாசிர் ஷா, ஹாஸன் அலி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அஸார் அலி 65, ஆஸாத் ஷபிக் 45 ஆகியோர் மட்டுமே நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
58.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்த பாக் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வெற்றிக்கு தேவையான 4 ரன்களை எடுக்க முடியாமல் தோல்வியுற்றது.
நியூஸி தரப்பில் அக்ஸர் பட்டேல் அபாரமாக பந்துவீசி 59 ரன்களை மட்டுமே தந்து 5 விக்கெட்டை சாய்த்தார். ஐஷ் சோதி, நீல் வாக்னர் தலா 2 விக்கெட்டை சாய்த்தனர். அக்ஸர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 1-0 என நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் துபையில் வரும் 24-ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் டிசம்பர் 3-ல் அபுதாபியிலும் நடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com