இழப்பீடு கோரிய பாக். கிரிக்கெட் வாரிய முறையீட்டை தள்ளுபடி செய்தது ஐசிசி

இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காததால் ஏற்பட்ட இழப்பீட்டை பிசிசிஐ வழங்க வேண்டும் என பாக்.
இழப்பீடு கோரிய பாக். கிரிக்கெட் வாரிய முறையீட்டை தள்ளுபடி செய்தது ஐசிசி


இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காததால் ஏற்பட்ட இழப்பீட்டை பிசிசிஐ வழங்க வேண்டும் என பாக். கிரிக்கெட் வாரியம் தொடர்ந்திருந்த முறையீட்டை ஐசிசி தகராறு தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் எதிரொலியாக பாகிஸ்தானுடன் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்கவில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2015 முதல் 2023 வரை ஆட வேண்டிய 6 தொடர்களில் இந்தியா பங்கேற்காததால் ஏற்பட்ட இழப்பீடு தொகை ரூ.447 கோடியை பிசிசிஐ வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிசிபி வழக்கு தொடர்ந்தது. 
ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களை கட்டுப்படுத்தாது. மேலும் ஐசிசிக்கு வருவாய் கிடைப்பதற்கான வழிவகைகளுக்கு பாக். ஆதரவு தரவில்லை. 2008-இல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய அரசு தான் இரு தரப்பு தொடர்களுக்கு அனுமதி தர வேண்டும் என பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது.
இவ்வழக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி தகராறு தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாக். வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்து தீர்ப்பு கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் மேல்முறையீடும் செய்ய முடியாதது எனவும் உத்தரவிட்டுள்ளது.
சிஓஏ தலைவர் வினோத் ராய் மகிழ்ச்சி: இந்த தீர்ப்பு பிசிசிஐ நிலைப்பாட்டை நியாப்படுத்தியுள்ளது. மகிழ்ச்சி தருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என பிசிபி கூறியது வெறும் பூர்வாங்க கடிதம் தான். இந்திய தரப்பு நியாயத்தை வலுவாக எடுத்துரைத்த சட்ட நிபுணர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வழக்கு செலவை பிசிபி வழங்க வலியுறுத்தி பிசிசிஐ விரைவில் வழக்கு தொடரும் என்றார்.
ஐசிசி வழங்கிய தீர்ப்பு அதிருப்தி தருவதாக உள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு குறித்து தீர்ப்பை முழுமையாக அறிந்த பின் முடிவு செய்வோம் என பிசிபி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com