பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீதான பாலியல் புகார் நிராகரிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சிஇஓ ராகுல் ஜோரி மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகாரை நிராகரித்தது 3 நபர் விசாரணை குழு.
மனைவியுடன் ராகுல் ஜோரி.
மனைவியுடன் ராகுல் ஜோரி.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சிஇஓ ராகுல் ஜோரி மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகாரை நிராகரித்தது 3 நபர் விசாரணை குழு.
சூதாட்டப் புகார் எதிரொலியாக நீதிபதி லோதா குழு பிசிசிஐ அமைப்பை சீரமைக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அதன்படி உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிரிக்கெட் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டது. பிசிசிஐ நிர்வாகத்தை கவனிக்கவும் சிஇஓவாக ராகுல் ஜோரி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜோரி முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மீடு மூலம் சமூகவலைதளத்தில் புகார் கூறப்பட்டது. இதனால் அவரை விடுப்பில் செல்ல கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏ உத்தரவிட்டது. இதனால் ராகுல் ஜோரி நீண்ட விடுப்பில் சென்றார். பிசிசிஐ நிர்வாகத்திலும் அவர் மீது பாலியல் புகார் உள்ளதா என விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் சர்மா, தில்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவி பர்கா சிங், வழக்குரைஞர் வீணா கெளடா ஆகியோர் கொண்ட 3 நபர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு பிசிசிஐ தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தது.
இந்நிலையில் புதன்கிழமை மூன்று நபர் குழு தனது விசாரணை முடிவை வெளியிட்டது. அதன்படி ராகுல் ஜோரி மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் உண்மையில்லை. பொய்யாக ஜோடிக்கப்பட்ட புகார் எனக்கூறி அதை நிராகரிப்பதாக குழு தெரிவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com