விஜய் ஹஸாரே  கோப்பை தமிழ்நாடு அபார வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் "சி' பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரிபுராவை புதன்கிழமை வென்றது.
விஜய் ஹஸாரே  கோப்பை தமிழ்நாடு அபார வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் "சி' பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரிபுராவை புதன்கிழமை வென்றது.
சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த திரிபுரா 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழ்நாடு 31.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வென்றது.
திரிபுரா இன்னிங்ஸில் ஸ்மித் படேல் அதிகபட்சமாக 11 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். 
பின்னர் தமிழ்நாடு இன்னிங்ஸில் அபினவ் முகுந்த் அதிகபட்சமாக கடைசிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் விளாசினார். அவரோடு பாபா இந்திரஜித் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திரிபுரா தரப்பில் ஹர்மீத் சிங் 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.
ஹரியாணா வெற்றி: அதே "சி' பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் ஹரியாணா 44 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது. முதலில் ஆடிய ஹரியாணா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 247 எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத், 46.1 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விஜேடி முறையில் ராஜஸ்தானை வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. பின்னர் ஜம்மு காஷ்மீருக்கு 36 ஓவர்களில் 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 35.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 எடுத்து வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com