ஆஸி. தொடரில் 'இந்த வேகப்பந்துவீச்சாளர்' இடம்பிடிக்க வாய்ப்புள்ளது: கோலி சூசகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஒரு குறிப்பிட்ட வேகப்பந்துவீச்சாளர் இடம்பிடிக்க நிச்சயம் வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆஸி. தொடரில் 'இந்த வேகப்பந்துவீச்சாளர்' இடம்பிடிக்க வாய்ப்புள்ளது: கோலி சூசகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஒரு குறிப்பிட்ட வேகப்பந்துவீச்சாளர் இடம்பிடிக்க நிச்சயம் வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இதில் இளம் நட்சத்திர நாயகன் பிருத்வி ஷா தொடர் நாயகன் விருது பெற்றார்.

இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பானதாக அமைந்தது. அவர்களால் தான் இந்த தொடரை வெல்ல முடிந்தது. குறிப்பாக இளம் வீரர்கள் பிருத்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது ஆட்டம் பாராட்டுதலுக்குரியது. ஏனெனில் அவர்கள் பயமின்றி விளையாடினார்கள். அதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டது. அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சர்வதேச அளவில் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டம் அவர்களிடத்தில் உள்ளது. இந்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கிலாந்து போன்று அங்கு பந்து அதிகம் ஸ்விங் ஆகாது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க உமேஷ் யாதவுக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது என்றார்.

முன்னதாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் மற்றும் 2-ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் சர்வதேச அரங்கில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் எடுப்பது இதுவே முதல்முறையாகும். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த இந்த விக்கெட்டில் வேகப்பந்துவீச்சில் சாதித்த உமேஷ் யாதவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com