ஆஸி. சுற்றுப் பயணம் : தொடக்க வீரர், விக்கெட் கீப்பர் தேர்வில் சிக்கல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய அணிக்கு மூன்றாவது தொடக்க வீரர், இரண்டாவது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது போன்ற முக்கிய
ஆஸி. சுற்றுப் பயணம் : தொடக்க வீரர், விக்கெட் கீப்பர் தேர்வில் சிக்கல்


ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய அணிக்கு மூன்றாவது தொடக்க வீரர், இரண்டாவது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது போன்ற முக்கிய பிரச்னைகள் தேர்வாளர் குழு மற்றும் அணி நிர்வாகத்தின் முன்பு உள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் ஆட்டத் தொடரையும் இழந்தது. டி20 தொடரை மட்டுமே வென்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்கள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா 2-0 என டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்தது. இதில் முதல் டெஸ்டில் மும்பையின் 18 வயதே ஆன பிரித்வி ஷா அறிமுகம் செய்யப்பட்டார். முதல் டெஸ்டிலேயே 134 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதே நேரத்தில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தும் 92 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இத்தொடரில் இரு இளம் வீரர்களும் தங்கள் ஆட்டத்திறமையை பறைசாற்றினர். 
கேஎல்.ராகுல் ஏமாற்றம்: மற்றொரு இளம் வீரரான கேஎல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட நிலையில் இதுவரை 17 இன்னிங்ஸ்களில் 14 முறை சரியாக ரன்களை எடுக்கவில்லை. ஆஸ்திரேலியா சுறறுப்பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மூன்றாவது தொடக்க வீரர் (ரிசர்வ் ஓபனர்) தேவையாகும்.
டெஸ்ட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் மூன்றாவது தொடக்க வீரர், இரண்டாவது விக்கெட் கீப்பர் போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன. கேஎல். ராகுல் தனது தவறுகளை சரி செய்து கொள்வார். அவர் சிறந்த எண்ணங்களுடன் உள்ளார். மற்றவர்கள் கூறும் குறைகளையும் ஏற்கிறார் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் அடிலெய்டில் முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்குகிறது. இதில் பிரித்வி ஷா-ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கக் கூடும் எனத்தெரிகிறது.
17 பேர் கொண்ட அணியை அறிவிக்கும் போது பல்வேறு அம்சங்களை கருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மயங்க் அகர்வால் தற்போது மேற்கிந்திய தீவுகள் தொடரில் மூன்றாவது தொடக்க வீரராக உள்ளார். உள்ளூர் போட்டிகளில் மயங்க் அகர்வால் கணிசமான ரன்களை குவித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள இளம் வீரர்களால் இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கருண் நாயர், முரளி விஜய் ஆகியோரும் தொடக்க வீரர்களுக்கான பட்டியலில் இருந்தனர். ஆனால் முரளி விஜய்யின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுந்துள்ளது. உள்ளூர் ரஞ்சி கோப்பை தொடரில் முரளி எவ்வாறு விளையாடுகிறார் என்பதை தேர்வாளர்கள் கவனிப்பர்.
முரளி விஜய்க்கு பதிலாக மயங்க் அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஷிகர் தவன் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதில் சிக்கல் உள்ளது. ஆஸி. மைதானங்கள் தட்டையாக காணப்படுவதால் முதல் 20 ஓவர்களுக்கு தவனை பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்ஸ்மேன்கள் வரிசையில் பிரித்வி, ராகுல் முதல் இரண்டு இடங்களில் விளையாடுவர்.
விக்கெட் கீப்பர்
விக்கெட் கீப்பர்களில் ரித்திமன் சாஹாவுக்கு அடுத்தபடியாக ரிஷ் பந்த் மட்டுமே களத்தில் உள்ளார். சாஹா இன்னும் சரிவர குணமடையவில்லை. இதனால் அவர் ஆஸி.சுற்றுப்பயணத்துக்கு தேர்வு கேள்விக்குறியாகி விட்டது. இந்திய ஏ அணியில் விளையாடும் கொண பாரத்தும் விக்கெட் கீப்பர் பட்டியலில் உளளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com