விஜய் ஹஸாரே கோப்பை: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தில்லி அணி!

சனிக்கிழமையன்று, மும்பை - தில்லி ஆகிய அணிகள் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன...
விஜய் ஹஸாரே கோப்பை: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தில்லி அணி!

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் தில்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

ஜார்க்கண்ட் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. நான்கு வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பியதால் 85 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்தது ஜார்க்கண்ட் அணி. விராட் சிங் 71 ரன்களும் ஆனந்த் சிங் 36 ரன்களும் எடுத்து அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இறுதியில் ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சயினி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிதான இலக்கென்று களமிறங்கிய தில்லி அணிக்குக் கடும் சவாலை அளித்தார்கள் ஜார்க்கண்ட் பந்துவீச்சாளர்கள். எந்த பேட்ஸ்மேனாலும் அரை சதமெடுக்க முடியவில்லை. நிதிஷ் ராணா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். எனினும் ஒருகட்டத்தில் 149 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்தது தில்லி அணி. அந்தச் சமயத்தில் பவன் நெகியும் சயினியும் பொறுப்புடன் விளையாடி அணியைக் கரை சேர்த்தார்கள். 

ஜார்க்கண்ட் அணி, 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நெகி 39, சயினி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஜார்க்கண்ட் தரப்பில் ஆனந்த் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

இளம் வீரர்கள் பிரித்வி ஷா, ஷிரேயஸ் ஐயர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றுக்கு மும்பை அணி நேற்று தகுதி பெற்றது. இதையடுத்து சனிக்கிழமையன்று, மும்பை - தில்லி ஆகிய அணிகள் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com