ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: வெற்றியோடு தொடங்கியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெறும் இப்போட்டியில், வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்கல் கோல் முடிந்தது. 
இந்தியாவின் கோல் கணக்கை 17-ஆவது நிமிடத்தில் லலித் உபாத்யாய் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, மன்தீப் சிங் ஆகியோர் முறையே 22, 23, 30-ஆவது நிமிடங்களில் கோலடித்தனர். இதனால் முதல் பாதி முடிவிலேயே இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதி ஆட்டத்தில் தில்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் (41, 55, 57-ஆவது நிமிடங்கள்) அடித்தார். குர்ஜந்த் சிங் (37 நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் சிங் (47), வருண் குமார் (49), சிங்லென்சனா சிங் (53) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் கோல் கணக்கை 11-ஆக உயர்த்தினர்.
இறுதிவரை ஓமனுக்கு கோல் வாய்ப்பு வழங்காத இந்தியா, முடிவில் 11- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஹாட்ரிக் கோலடித்த தில்பிரீத் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பாக். உடன் இன்று மோதல்: இதனிடையே, இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானை சனிக்கிழமை சந்திக்கிறது. 
சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான், இதில் வெற்றி காணும் முனைப்பில் உள்ளது.
இந்த ஆட்டம் குறித்து இந்திய பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் மூலமாகவே இந்தியாவுக்கான உண்மையான போட்டி தொடங்குகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com