ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: தொடரை வென்றது பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 373 ரன்கள் வித்தியாசத்தில்
கோப்பை வென்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர்.
கோப்பை வென்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 373 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த 2-ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 81 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 94 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 50-ஆவது ஓவரின் 6-ஆவது பந்தை சந்தித்த நிலையில் 145 ரன்களுக்கு சுருண்டது. ஆரோன் ஃபிஞ்ச் மட்டும் 39 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அப்பாஸ் 5 பேரை வெளியேற்றினார். 
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், 2-ஆவது இன்னிங்ஸில் 120 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 400 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பாபர் ஆஸம் 99 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 538 என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 49-ஆவது ஓவரில் 4 பந்துகளைச் சந்தித்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்னஸ் லாபஸ்சேஞ்ச் மட்டும் 43 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

 பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அப்பாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் போட்டி இதுவாகும்.


 2006-க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அப்பாஸ் பெற்றுள்ளார். 2006-இல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஆசிஃப் அந்த பெருமையை பெற்றிருந்தார்.


 பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இதுவே, ஆஸ்திரேலியாவின் மிக மோசமான தோல்வியாகும். முன்னதாக, இதே மைதானத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே பாகிஸ்தானிடம் 356 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது ஆஸ்திரேலியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com