ஐபிஎல் 2019: முதல் வீரராக டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 போட்டிக்காக தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கை பெங்களூரு அணியிடம் இருந்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் 2019: முதல் வீரராக டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 போட்டிக்காக தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கை பெங்களூரு அணியிடம் இருந்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.
 பிசிசிஐ-க்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் வகையில் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2009-முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் விளையாடும் முன்னணி வீரர்களை அதிக விலை கொடுத்து பல்வேறு அணிகள் வாங்குகின்றன.
 தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டி காக்கை கடந்த 2018 ஐபிஎல் ஏலத்தில் ரூ.2.8 கோடி அளித்து வாங்கியது ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்). தற்போது அதே விலைக்கு டி காக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. ஆர்சிபி அணி இதற்காக டி காக்கை விடுவித்துள்ளது என ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 மேலும் இந்த பரிமாற்றத்துக்காக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸþர் ரஹ்மான், (ரூ.2.2 கோடி), இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா (ரூ.50 லட்சம்) ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் விடுவித்துள்ளது. எவின் லெவிஸுடன் இணைந்து டி காக் ஆடுவது மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை தரும். டி காக் ஏற்கெனவே தில்லி, ஹைதராபாத் அணிகள் பங்கேற்று விளையாடியுள்ளார். மொத்தம் 34 ஐபிஎல் ஆட்டங்களில் 1 சதம், 6 அரை சதங்களுடன் மொத்தம் 927 ரன்களை விளாசியுள்ளார் டிகாக்.
 நவம்பர் 15-கடைசி நாள்: ஐபிஎல் தொடர்பாக வீரர்களை பரிமாறிக் கொள்ளுதல், விடுவித்தல் போன்றவற்றுக்கு வரும் நவம்பர் 15-ஆம் தேதி இறுதி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com