ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: விராட் கோலிக்கு ஓய்வு!

கலீல் அகமத் என்கிற 20 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார்... 
ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: விராட் கோலிக்கு ஓய்வு!

துபை, அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஷிகர் தவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

யோ யோ தேர்வில் தேர்ச்சி அடைந்த அம்பட்டி ராயுடு இந்திய அணியில் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இந்திய அணியில் சிலகாலம் இடம்பெறாமல் இருந்த கெதர் ஜாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல புவனேஸ்வர் குமாரும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். கலீல் அகமத் என்கிற 20 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார். 

இந்தப் போட்டி, செப்டம்பர் 15-ல் தொடங்கி செப்டம்பர் 28 அன்று நிறைவுபெறுகிறது. டிசம்பர் 19 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இப்போட்டியை நடத்தும் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வழங்கியது பிசிசிஐ. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. ஆசிய கவுன்சில் போட்டியில் வெல்லும் அணி 6-ஆவது அணியாக இவற்றோடு இணையும்.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், அம்பட்டி ராயுடு, மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், அக்‌ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பூம்ரா, ஷர்துல் தாக்குர், கலீல் அகமது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com