திறமையைத் தொடர்ந்து நிரூபித்ததன் பலன்: இந்திய டெஸ்ட் அணிக்கு விரைவில் தேர்வாகவுள்ள முஹமது சிராஜ்!

இந்தப் புள்ளிவிவரங்களைக் கவனியுங்கள். இதற்குப் பிறகும் முஹமது சிராஜை தேர்வு செய்யாமல் எப்படி இருக்கமுடியும்?
திறமையைத் தொடர்ந்து நிரூபித்ததன் பலன்: இந்திய டெஸ்ட் அணிக்கு விரைவில் தேர்வாகவுள்ள முஹமது சிராஜ்!

இந்தியா ஏ' - ஆஸ்திரேலியா ஏ' அணிகளிடையேயான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முஹமது சிராஜ் அற்புதமாகப் பந்துவீசி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி, பேட் செய்யத் தீர்மானித்தது. அந்த அணி 75.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 127 ரன்கள் விளாசினார். இந்திய ஏ அணி தரப்பில் முகமது சிராஜ் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஏ அணி 2-வது இன்னிங்ஸில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 4 அன்று தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் தொடரில் முஹமது சிராஜைத் தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசிவருகிறார்கள். இஷாந்த் சர்மா, பூம்ரா, ஷமி ஆகியோர் எதிரணிகளுக்குக் கடும் அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். எனினும் உமேஷ் யாதவ் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஷர்துல் தாக்குர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றாலும் இதுவரை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவே மே.இ. தொடருக்கு சிராஜ் தேர்வாக வாய்ப்புண்டு என்று அறியப்படுகிறது. 24 வயது சிராஜ், இதுவரை 3 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்தப் புள்ளிவிவரங்களைக் கவனியுங்கள். இதற்குப் பிறகும் முஹமது சிராஜை தேர்வு செய்யாமல் எப்படி இருக்கமுடியும்?

2018-ல் முஹமது சிராஜ்: முதல்தரப் போட்டிகள்

ஆட்டங்கள் - 5
இன்னிங்ஸ் - 9
விக்கெட்டுகள் - 40
சராசரி - 15.08
ஸ்டிரைக் ரேட் - 28.95
5 விக்கெட்டுகள் - 3
4 விக்கெட்டுகள் - 4
சிறந்த பந்துவீச்சு - 8/59 (இந்திய ஏ அணியின் சிறந்த பந்துவீச்சு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com