துளிகள்....

துளிகள்....

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முன்னாள் தலைவர் பி.என்.தத் (92) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.கடந்த 1982-88 முதல் பிசிசிஐ துணைத் தலைவராக இருந்த அவர் 1989-இல் தலைவர் பதவியேற்றார். மேலும் ஜக்மோகன் டால்மியாவின் வழிகாட்டியாகவும் தத் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு முன்னாள் கேப்டன் கங்குலி, பிசிசிஐ நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


செர்பிய தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற ஜூனியர் கேடட் டேபிள் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பயாஸ் ஜெயின் சாம்பியன் பட்டம் வென்றார். அதே நேரத்தில் மகளிர் பிரிவு, கேடட் சிறுவர் பிரிவிலும் இந்திய அணி பட்டம் வென்றது.


ஜார்ஜியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எல்சல்வாடாருடன் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றை இந்திய அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் 16 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் வலிமையான ஈரான் அணியை டிரா செய்தது இந்தியா. கடந்த 1984-க்கு பின் இப்போது தான் ஈரான் அணியை டிரா செய்துளளது இந்திய அணி. 


கடந்த 2015-இல் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் தன்னை ஓஸாமா என ஆஸி. கிரிக்கெட் வீரர் அழைத்தனர் என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறிய புகார் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை மேற்கொண்டது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் விசாரணை முடித்துக் கொள்வதாக சிஏ தெரிவித்துள்ளது.


ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 50 கிலோ பிரிவில் நட்சத்திரவீராங்கனை வினேஷ் போகட் காயமுற்றதால், அவருக்கு பதிலாக ரித்து போகட் களமிறங்குகிறார். அதே நேரத்தில் 53 கிலோ பிரிவில் பங்கி பங்கேற்கிறார் என இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com