இறுதிப் போட்டிகளில் தோல்வியே காணாத கேப்டன் ரோஹித் சர்மா! கோலியின் பதவிக்கு ஆபத்தா?

பேசாமல் இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கு கோலிக்குப் பதிலாக இவரையே கேப்டனாக நியமிக்கலாமே என்று இப்போதே பலரும்...
இறுதிப் போட்டிகளில் தோல்வியே காணாத கேப்டன் ரோஹித் சர்மா! கோலியின் பதவிக்கு ஆபத்தா?

ஒரு போட்டியின் இறுதிப்போட்டி தான் எந்தவொரு கேப்டனுக்கும் அமிலச் சோதனையாக இருக்கும். என்னதான் போராடி இறுதிச்சுற்று வரை வந்தாலும் அந்தக் கடைசிக்கட்டத்தையும் வெற்றிகரமாகத் தாண்டினால் மட்டுமே வரலாற்றில் இடம்பெறமுடியும். 1992 உலகக் கோப்பையை இம்ரான் கானும் 1996 உலகக் கோப்பையை ரணதுங்காவும் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார்கள். அந்த வெற்றி மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் அவர்களை வரலாறு வேறு விதமாகவே எடை போட்டிருக்கும்.

வங்கதேச அணியை கடும் போராட்டத்துக்கு பின் 3  விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நிறைவாக இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. தொடக்க வீரர் லிடன் தாஸ் 121 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 50-ஆவது ஓவரின் கடைசி பந்தில் இந்திய வெற்றி இலக்கை எட்டியது. கடும் போராட்டத்துக்கு பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா அதிகப்பட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.  ஆட்ட நாயகன் விருது லிடன் தாஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ஷிகர் தவன் வென்றார்.

ஒரு கேப்டனாக நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவருகிறார் ரோஹித் சர்மா. பேசாமல் இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கு கோலிக்குப் பதிலாக இவரையே கேப்டனாக நியமிக்கலாமே என்று இப்போதே பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எனினும் அடுத்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் அதுவரை கோலியின் பதவிக்கு ஆபத்து எதுவும் நேர வாய்ப்பில்லை. எனினும் கோலியின் கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா வருங்காலத்தில் அச்சுறுத்தலாக விளங்குவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மூன்று ஐபிஎல் போட்டிகள், சாம்பியன்ஸ் லீக், இலங்கையில் நடைபெற்ற நிடாஹஸ் கோப்பை, ஆசியக் கோப்பை என முக்கியப் போட்டிகளை வென்றுள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா. இதன் முக்கிய அம்சம் - இதுவரை கேப்டனாக விளையாடிய எந்தவொரு இறுதிப் போட்டியிலும் அவர் தோல்வியைச் சந்தித்ததில்லை. ரோஹித் தலைமையில் ஓர் அணி இறுதிச்சுற்றுக்குள் கலந்துகொள்கிறது என்றால் வெற்றியும் கோப்பையும் நிச்சயம்.

 
ரோஹித் சர்மா - கேப்டனாக

முதல் IPL ✔️ (2013)
முதல் சாம்பியன்ஸ் லீக் CLT20 ✔️ (2013)
முதல் ஒருநாள் தொடர் ✔️ (இலங்கைக்கு எதிராக, 2017)
முதல் டி20 தொடர் ✔️ (இலங்கைக்கு எதிராக, 2017)
முதல் முத்தரப்பு தொடர் ✔️ (நிடாஹஸ் கோப்பை, 2018)
முதல் ஆசியக் கோப்பை ✔️ (2018)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com