ஒட்டன்சத்திரம் அருகே விண்ணிலிருந்து விழுந்த மர்மப் பொருள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை விண்ணி லிருந்து மர்மப் பொருள் ஒன்று மண்ணில் விழுந்தது
ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை வானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள்.
ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை வானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை விண்ணி லிருந்து மர்மப் பொருள் ஒன்று மண்ணில் விழுந்தது. அது விமானத்திலிருந்து விழுந்த பொருளாக இருக்கலாம் என அதை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கூத்தம்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட மோதுப்பட்டியில் வேலுச்சாமி என்பவரது தரிசு நிலத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் மர்மப் பொருள் ஒன்று விழுந்தது. தகவலறிந்த கள்ளிமந்தையம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மர்மப் பொருள் கிடந்த பகுதிக்கு பொதுமக்கள் வராமல் பாதுகாத்தனர். மேலும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அந்த மர்மப் பொருள் கருப்பு நிறத்தில் உருண்டை வடிவில் இருந்தது. அதன் எடை சுமார் 10 முதல் 15 கிலோ வரை இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

அந்த மர்மப் பொருளை ஆய்வு செய்த மதுரையைச் சேர்ந்த காவல்துறை தடயவியல் நிபுணர் பாஸ்கரன், அது விமானத்தில் பயன்படுத்தக் கூடிய பொருளைப் போன்று இருப்பதாக தெரிவித்தார். ஆதலால், திண்டுக்கல்லில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்தப் பொருளை சோதனையிட்டனர். அதில், விமானத்தில் பயன்படுத்தக்கூடிய வாயு கலன் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மர்மப் பொருள் விழுந்ததை கேள்விப்பட்ட சுற்று வட்டாரப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதை பார்த்து சென்றனர். இந்த மர்மப் பொருள் விழுந்ததை நேரில் பார்த்த விவசாயி ரங்கசாமி (50) கூறியதாவது:

நானும் எனது மனைவி மற்றும் தொழிலாளர்கள் காலை 11 மணிக்கு தக்காளி பறித்துக் கொண்டிருந்தோம். அப்போது வானத்தில் இருந்து கருப்பு நிறத்தில் ஒரு மர்மப் பொருள் நிலத்தை நோக்கி பயங்கர சத்தத்துடன் கீழே வந்து விழுந்தது.

நான் அருகில் சென்று பார்த்தபோது அதிலிருந்து லேசாக புகை வந்தது. இதனால் பயந்து, கள்ளிமந்தையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com