ஜெயலலிதாவின் அமெரிக்கா சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் அமெரிக்கா சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
Published on

சென்னை: ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, மேல்சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா கொண்டு செல்லலாம் என்று நான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறினேன்.

மேலும், ஜெயலலிதாவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிமுக தொண்டர்கள் நம்மை வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் விஜயபாஸ்கர் காதில் வாங்கி கொள்ளவில்லை.

எனவே, ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி அவர் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முன்பும், பின்பும் நடந்தது என்ன? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தினால் தான் நம்முடைய தர்மயுத்தம் வெற்றி பெறும்.

விரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும். அம்மா அரசு அமையும். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com