மைல் கற்களில் ஹிந்தியில் ஊர் பெயர்: டி.ஆர்.பாலு விளக்கம்

நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தியில் எழுதப்படுவதற்கு திமுக காரணம் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விளக்கம்
மைல் கற்களில் ஹிந்தியில் ஊர் பெயர்: டி.ஆர்.பாலு விளக்கம்

நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தியில் எழுதப்படுவதற்கு திமுக காரணம் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 2004 டிசம்பர் 21-இல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், நடைமுறையில் இருக்கும் இரு மொழிக் கொள்கைக்குப் பேராபத்து ஏற்படும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் திடீரென ஹிந்தியில் எழுதத் தொடங்கியுள்ளனர். இதற்கு மத்திய அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பாலுதான் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டினார்.
அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். அதில், எல்லா மைல் கற்களிலும் மாநில மொழிகளில் ஊர்களின் பெயர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஊர் ஆரம்பிக்கும் இடத்தில், ஊரின் பெயரை மாநில மொழியிலும், அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வரும் கற்களில் ஆங்கிலம், இதர மொழிகள் இருக்க வேண்டும். எப்படியும் மைல் கற்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவிப்பு வெளியிட்டேன்.
இந்நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முந்தைய அரசின் நடைமுறையைத்தான் பின்பற்றுகிறோம் என்று திமுக மீது உண்மைக்கு மாறான வகையில் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னையில் அவதூறு கருத்துகள் பரப்புவதை இன்றைய மத்திய அமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com