பள்ளிக் கல்வி குறித்து ஆக.12 -இல் அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுடன் வரும் சனிக்கிழமை (ஆக. 12 ), சென்னையில் ஒரே மேடையில் விவாதம் நடைபெறும் என்று பாமக இளைஞரணித் தலைவ
பள்ளிக் கல்வி குறித்து ஆக.12 -இல் அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுடன் வரும் சனிக்கிழமை (ஆக. 12 ), சென்னையில் ஒரே மேடையில் விவாதம் நடைபெறும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அமைச்சர் கேட்டுக் கொண்டவாறு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் வரும் 12-ஆம் தேதி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த விவாதம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா எனச் சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன்தான். அவரது சவாலை நான் ஏற்றுக் கொண்ட நிலையில், விவாதத்துக்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர்தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார். எனினும், அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்துக்கான ஏற்பாடுகளை பாமக மேற்கொண்டுள்ளது.
தொலைக்காட்சியில் தொடர் நேரலை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவையில் வரும் 12 -ஆம் தேதி நடைபெற உள்ள விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். இந்த விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இடமாற்ற ஆணைகள் காரணமாக...பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கவும், தமிழகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளை தெரிவிக்கவும் இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com