கட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்: முதல்வர் உருக்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்: முதல்வர் உருக்கம்

சென்னை: தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் அனைவரும் முடிவெடுக்க வேண்டும்

தற்காலிகமாக ஏற்பட்டுள்ள மனக்கசப்பை மறந்து ஒன்று பட்டு செயல்பட அனைவரையும் அழைக்கிறேன்.

தற்போது நாம் பிளவுபடுவதை எதிர்பார்த்து எதிரிகள் காத்திருக்கின்றனர். அதற்குஇடம் கொடுக்கக் கூடாது

அம்மா விட்டு சென்ற பணிகள் தொடர் உங்கள் அனைவரையம் அழைக்கிறேன்.

கட்சியில் இ வ்வாறான பிளவு ஏற்படுவதை மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. 

ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அவரது வழியில் செல்வது நமது கடமை

இவ்வாறு  பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com