அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா புகைப்படம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்   

அரசு அலுவலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை நீக்க கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்... 
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா புகைப்படம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்   

சென்னை: அரசு அலுவலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்பபடத்தை நீக்க கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில் அவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஜெயலலதாவின் படத்தை அரசு அலுவலங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com