தமிழர் பாரம்பரியத்தை தேடும் இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், எங்கே எங்கே எங்கே என்ற கேள்விகளுடன் தமிழர், தமிழகத்தின் பாரம்பரியத்தை தேடும் வகையில் சமூக வலை தளங்கள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
Updated on
2 min read

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், எங்கே எங்கே எங்கே என்ற கேள்விகளுடன் தமிழர், தமிழகத்தின் பாரம்பரியத்தை தேடும் வகையில் சமூக வலை தளங்கள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சி வலையில் சிக்கி தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தை இழந்துள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்தி நம்நாட்டு பாரம்பரிய தொழில்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டோம்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள இளைஞர்கள் தமிழகத்தின், தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழர்கள் மறந்த பல பாரம்பரிய கலாசார, பண்பாட்டு தகவல்களை நினைவு கூரும் வகையில்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேள்விகளை எழுப்பி சமூக வலை தளங்கள் வாயிலாக தகவல்களை பரப்பி வருகின்றனர்.

சமூக வலை தளங்கள் வாயிலாக இளைஞர்கள் தமிழர் பாரம்பரியம் எங்கே என்ற தேடலுடன் கேட்கும் கேள்விகள்...

எங்கே எங்கே எங்கே எங்கே
பனையோலை விசிறி எங்கே
பல்லாங்குழி எங்கே
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே
கோகோ விளையாட்டு எங்கே
சாக்கு பந்தயம் எங்கே
கில்லி எங்கே
கும்மி எங்கே
கோலாட்டம் எங்கே
திருடன் போலீஸ் எங்கே
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே
மரப்பாச்சி கல்யாணம் எங்கே
மட்டை ரயில் எங்கே
கமர்கட் மிட்டாய் எங்கே
குச்சி மிட்டாய் எங்கே
குருவி ரொட்டி எங்கே
இஞ்சி மரப்பா எங்கே
கோலி குண்டு எங்கே
கோலி சோடா எங்கே
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே
எலந்தை பழம் எங்கே
சீம்பால் எங்கே
பனம் பழம் எங்கே
பழைய சோறு எங்கே
நுங்கு வண்டி எங்கே
பூவரசன் பீப்பி எங்கே
கைகளில் சுற்றிய
பம்பரங்கள் எங்கே
நடை பழக்கிய
நடை வண்டி எங்கே
அரைஞாண் கயிறு எங்கே
அன்பு எங்கே
பண்பு எங்கே
பாசம் எங்கே
நேசம் எங்கே
மரியாதை எங்கே
மருதாணி எங்கே
சாஸ்திரம் எங்கே
சம்பிரதாயம் எங்கே
விரதங்கள் எங்கே
மாட்டு வண்டி எங்கே
மண் உழுத எருதுகள் எங்கே
செக்கிழுத்த காளைகள் எங்கே
எருமை மாடுகள் எங்கே
பொதி சுமந்த கழுதைகள் எங்கே
பொன் வண்டு எங்கே
சிட்டுக்குருவி எங்கே
குயில் பாடும் பாட்டு எங்கே
குரங்கு பெடல் எங்கே
அரிக்கேன் விளக்கு எங்கே
விவசாயம் எங்கே
விளை நிலம் எங்கே
ஏர் கலப்பை எங்கே
மண் வெட்டி எங்கே
மண் புழு எங்கே
வெட்டு மண் சுமந்த
பின்னல் கூடை எங்கே
பனை ஓலை
குடிசைகள் எங்கே
தூக்கனாங் குருவி
கூடுகள் எங்கே
குளங்களில் குளித்த
கோவணங்கள் எங்கே
அந்த குளங்களும் எங்கே
தேகம் வளர்த்த
சிறுதானியம் எங்கே
அம்மிக்கல் எங்கே
ஆட்டுக்கல் எங்கே
மோர் மத்து
கால் கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும்
பெரியவர்கள் எங்கே
தோளிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டு எங்கே
பிள்ளைகளை சுமந்த
அம்மாக்களும் எங்கே
தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை எங்கே
மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை எங்கே
மாராப்பு சேலை அணிந்த
பாட்டிகள் எங்கே
இடுப்பை சுற்றி கட்டிய
பணப் பை எங்கே
இடுப்பில் சொருகிய
சுருக்கு பை எங்கே
தாவணி அணிந்த
இளசுகள் எங்கே
சுத்தமான கிணற்று நீரும் எங்கே
மாசு இல்லாத காற்று எங்கே
நஞ்சில்லாத காய்கறி எங்கே
பாரம்பரிய
நெல் ரகங்களும் எங்கே
எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள் வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே
சிந்திக்க நமக்கு
நேரம் தான் எங்கே
எங்கே எங்கே எங்கே
இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்ற அவசரப் பயணம் தான் எங்கே என சமூக வலை தளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com