கவிஞர் ஆத்மாநாம் விருதுக்கு 2 பேர் தேர்வு

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த கவிஞருக்கான விருது கவிஞர் அனார், மொழிபெயர்ப்பு கவிதை நூல் விருதுக்கு கவிஞர் என்.சத்தியமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த கவிஞருக்கான விருது கவிஞர் அனார், மொழிபெயர்ப்பு கவிதை நூல் விருதுக்கு கவிஞர் என்.சத்தியமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கவிஞர் அனாருக்கு ரூ.25,000 ரொக்கம், விருதும், கவிஞர் என்.சத்தியமூர்த்திக்கு ரூ.10,000 விருதும் வழங்கப்படும் என ஆத்மாநாம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை அறங்காவலர் சீனிவாசன் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கவிஞர் ஆத்மாநாம் இலக்கிய பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையைத் கடந்த 2015}இல் தொடங்கி, சிறந்த கவிதை தொகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த கவிதை தொகுப்பு: இதில் முதல் முதல்கட்டமாக கவிஞர் கலாப்ரியாவை நெறியாளராகக் கொண்டு கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க.மோகனரங்கன் ஆகியோர் கொண்ட நடுவர் குழு 2017-ஆம் ஆண்டுக்கான விருதுக்குறிய கவிதை தொகுப்புக்கான விருதாளரைத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்குழு கடந்த டிச}2013 முதல் டிச}2016 வரையில் வெளிவந்த கவிதை நூல்களில் இருந்து தேர்வு செய்து சிறுபட்டியல் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான ரூ.25,000 பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருதுக்கு பெருங்கடல் போடுகிறேன் தொகுப்புக்காக கவிஞர் அனாருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த மொழிபெயர்ப்பு கவிதை: அதேபோல், இந்தாண்டு முதல் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்புகளுக்கு கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது ரூ.10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் ஆர்.சிவகுமார், ஜி.குப்புசாமி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரை கொண்ட குழுவினர் தாகங்கொண்ட மீனொன்று: ஜலாலுத்தின் ரூமி கவிதை நூலுக்காக என்.சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட உள்ளது.
செப்.30}இல் விழா: விருது வழங்கும் விழா வரும் செப்.30}ஆம் தேதி சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com