போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப் பயன்கள், ஓய்வூதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.4500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் போராட்டம் முடிவுக்கு வராததால், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், தொழிற்சங்கத் தலைவர்களிடம் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின்படி சுமுகமான முடிவு ஏற்படவும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 18% அதிகரிப்பு

தில்லியில் 23 பாரம்பரிய சின்னங்களை சுற்றிப் பாா்க்க மாணவா்களுக்கு கடவுச்சீட்டு!

தில்லியை வாட்டும் குடிநீா் பற்றாக்குறை பிரச்னை: வழக்கத்தை விட வஜிராபாத்தில் நீா் வரத்து குறைவு







