தமிழிசையின் விக்கிப்பீடியா பக்கத்தை தாறு மாறாகத் திருத்திய நெட்டீசன்கள்!

மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்கச் சொல்லி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் விக்கிப்பீடியா பக்கத்தில் சிலர் பூந்து விளையாடியுள்ளனர்.
தமிழிசையின் விக்கிப்பீடியா பக்கத்தை தாறு மாறாகத் திருத்திய நெட்டீசன்கள்!
Updated on
1 min read

மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்கச் சொல்லி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் விக்கிப்பீடியா பக்கத்தில் சிலர் பூந்து விளையாடியுள்ளனர்.

உலகில் உள்ள பல முக்கிய பிரபலங்களின் முழு விவரத்தையும் நாம் அறிந்துகொள்ள உதவுவது விக்கிப்பீடியா வலைத்தளம். இதில் யார் வேண்டுமானாலும் அதில் இருக்கும் செய்தியை திருத்தி எழுதும் வசதி உள்ளது. இந்த வசதி இன்று ஒரு பெரிய பிரச்னையாக வளர்ந்து நிற்கிறது என்றே சொல்லலாம். 

ஜி.எஸ்.டி, மற்றும் மருத்துவ துறை பற்றி பொய்யான கருத்துகளை மெர்சல் படத்தில் விஜய் பேசியிருப்பதாகப் பா.ஜ.க கட்சியினர் படத்தையும், நடிகர் விஜய் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த பிரச்னை பூதாகரம் எடுக்கத் தமிழிசையும் ஒரு முக்கிய காரணம் என்பதால் அடையாளம் தெரியாத சிலர் அவரது விக்கிப்பீடியா பக்கத்தில் அவரை அவமானம் படுத்தும் வகையில் தகவல்களை திருத்தியுள்ளனர்.

தமிழிசை சௌந்தரராஜன் என்கிற பெயரை ‘டுமிலிசை சௌந்தரராஜன்’ எனவும் ‘சவுண்டு சரோஜா’ எனவும் மாற்றியுள்ளனர். மேலும் முன்னுரையில் அவருடைய தலை முடியைக் கேலி செய்து ‘பரட்டை’ என விமர்சித்தும் அவரை பாரதிய ஜனதா கட்சியின் அடிமை எனவும், மேலும் பெண்கள் நல மருத்துவரான அவரை மிருக நல மருத்துவரெனவும் தகவல்களை திருத்தியுள்ளனர். பின்பு சிறிது நேரத்தில் இந்தச் செய்திகளும் அவரது பெயரும் மீண்டும் பழைய நிலைக்கே மாற்றப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com