வீட்டிலேயே சுகப் பிரசவ விவகாரம்: ஹீலர் பாஸ்கர் கைது

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் தனியார் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சுகப் பிரசவ முகாம்' திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.
வீட்டிலேயே சுகப் பிரசவ விவகாரம்: ஹீலர் பாஸ்கர் கைது

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் தனியார் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சுகப் பிரசவ முகாம்' திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.

கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் அனடாமிக் தெரபி என்ற தனியார் அமைப்பின் சார்பாக 'இனிய சுகப் பிரசவம்'  என்னும் பெயரில் ஒரு நாள் மருத்துவ முகாம் ஒன்று வரும் 26-ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு புதன்கிழமையன்று  வெளியானது. இதில் மருத்துவரிடமும் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதே சுகப் பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை ஆகும்’என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வலியிறுதியிருந்தன.

இந்நிலையில், வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்த ஹீலர் பாஸ்கர் கோவையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். மோசடி புகாரில் கோவை நிஷ்டை மைய உரிமையாளர் ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:

அறிவியலுக்கு புரம்பாக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும்.  வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம், தடுப்பூசி வேண்டாம் என பொய் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரித்தார்.

சமீபத்தில் திருப்பூர் யூ ட்யூப் உதவியுடன் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு கணவன் முயற்சித்த சம்பவத்தில் அவரது மனைவி கிருத்திகா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com