இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: 3,500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, அவர்களது படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெறிந்தும் உள்ளனர்.
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: 3,500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, அவர்களது படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெறிந்தும் உள்ளனர்.

சுமார் 50 படகுகளில் இருந்து வீசப்பட்ட வலைகளை அறுத்தெறிந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 650 படகுகளில் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்ததோடு, மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்கி, வலைகளையும் அறுத்தெறிந்தனர்.

மீனவப் பிரதிநிதிகளை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து, இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்த நிலையில், இன்று இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

மேலும், ஜனவரி 7ம் தேதி, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்து 2வது நாளில் மீண்டுமொரு விரட்டியடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1500 பேரை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் தடுத்தும், அவர்களது வலைகளை அறுத்தும் கடலில் வீசினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 7 ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந்தனர். 

இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: ஒரு சில மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க கச்சத்தீவு அருகே இந்திய கடற்படை கப்பலை நிறுத்திப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com