மருத்துவ சிகிச்சைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: ஆளுநர் பெருமிதம்

மருத்துப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார். 
சென்னை மியாட் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மையத்தை புதன்கிழமை திறந்து வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
சென்னை மியாட் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மையத்தை புதன்கிழமை திறந்து வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
Published on
Updated on
1 min read


மருத்துப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார். 
சென்னை மியாட் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ. (3டி எம்.ஆர்.ஐ. கருவி) பரிசோதனை மையத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மருத்துவத் துறையில் தனியாரின் பங்களிப்பு கடந்த 100 ஆண்டுகளாக உள்ளது. 
சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, மேலை நாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வருவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. 
நோயின் தன்மையை துல்லியமாக அறியும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை முறையில், நோயாளிக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படாது என்பது சாதகமான அம்சமாகும்.
நோய் என்ற பொது எதிரியை மட்டுமே நோக்கத்தில் கொண்டு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் அனைத்து மருத்துவப் பிரிவினரும் ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றார் ஆளுநர் புரோஹித். 3டி எம்.ஆர்.ஐ. கருவியின் சிறப்பு அம்சங்கள் குறித்து மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ், கதிரியக்க சிகிச்சைப் பிரிவின் முதுநிலை மருத்துவர் மதன் ஆகியோர் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மியாட் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com