வயிற்றில் நீர்க்கட்டியை அகற்றி சிறுவனுக்கு மறுவாழ்வு

ஃபிஜி தீவைச் சேர்ந்த 4 வயது சிறுவனின் வயிற்றுப் பகுதியில் இருந்த 2 கிலோகிராம் நீர்க் கட்டியை லாப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை மூலம் சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி


ஃபிஜி தீவைச் சேர்ந்த 4 வயது சிறுவனின் வயிற்றுப் பகுதியில் இருந்த 2 கிலோகிராம் நீர்க் கட்டியை லாப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை மூலம் சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தை அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் எம்.ராகவன், மயக்க மருத்துவர் ஜெ.சர்வ விநோதினி, மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:-ஃபிஜி தீவைச் சேர்ந்த சிறுவன் அர்னவுக்கு பிறந்து 6 மாதம் முதல் சரியாக பசி எடுக்கவில்லை. அழுது கொண்டே இருந்தான்.
10 மாதத்தில் குழந்தைக்கு ஹெர்னியா உள்பட மொத்தம் 3 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. குழந்தையின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 
மியாட் மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் அர்னவுக்கு வயிற்றுப் பகுதியில் நீர்க் கட்டி பெரிதாக இருப்பது கண்டறியப்பட்டது; இதனால் லாப்ராஸ்கோப்பி சிகிச்சையை அளிப்பது பெரும் சவாலாக இருந்தது.
பிறவி நிணநீர் குறைபாடு (லிஃம்பட்டிக் மால்ஃபார்மேஷன்') காரணமாகவே ஒரு லட்சத்துக்கு ஒரு குழந்தைக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும். லாப்ராஸ்கோப்பி கருவி மூலம் வயிற்றுப் பகுதியில் 3 துளைகள் போடப்பட்டு நீர்க்கட்டியின் திரவம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, கட்டி முழுவதுமாக வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது அர்னவ் நன்றாகச் சாப்பிடத் தொடங்கி நலமுடன் உள்ளதாக'' அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com