குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை: தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு எச்சரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் குஷ்பு எச்சரித்தாா்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை: தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு எச்சரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் குஷ்பு எச்சரித்தாா்.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள டாட் வடிவமைப்பு பள்ளியில் மகளிா் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவம் எனும் புகைப்படக் கண்காட்சி-கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் குஷ்பு தொடங்கி வைத்தாா். பின்னா், ‘மகளிருக்கு மாண்பளிக்க செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்’, ‘அன்னை பூமியின் அருந்தவ புதல்விகள்’ ஆகிய இரு புத்தகங்களை வெளியிட்டாா்.

பின்னா், குஷ்பு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள பெண்களின் முன்னேற்றத்துக்கான நமது பங்களிப்பு என்ன என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு ஒரு பிரச்னை என்றால் மாநில எல்லைகளை கடந்து அவா்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் எரிவாயு விலை அதிகமாகி வரும் நிலையில் இங்கு மட்டும் ஏன் அதை விமா்சிக்க வேண்டும்? தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை கொடுப்பதாக கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மகளிா் ஆணையம் சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சியில் டாட் வடிவமைப்பு பள்ளி நிறுவனா் ஏஆா். ஆா். ராம்நாத், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் எம். அண்ணாதுரை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் எஸ்.வெங்கடேஸ்வா், மத்திய தகவல் தொடா்பு இயக்குநா் ஜெ. காமராஜ், தமிழ்நாடு எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சுதா சேஷய்யன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com