குமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ.20 கோடியில் ராமாயண கண்காட்சிக் கூடம்: காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்துவைத்தார்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமாயண கண்காட்சிக் கூடத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்த ராமாயண கண்காட்சிக் கூடம்.
பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்த ராமாயண கண்காட்சிக் கூடம்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமாயண கண்காட்சிக் கூடத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
விவேகானந்த கேந்திரம் சார்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் ராமாயண கண்காட்சிக் கூடம், பாரத மாதா கோயில், அனுமன் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரியும் விவேகானந்த கேந்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவையாகும். விவேகானந்த கேந்திரத்தில் ராமாயண கண்காட்சிக் கூடமும், பாரத மாதா கோயிலும், அனுமன் சிலையும் தத்ரூபமாக அமைந்துள்ளன. இதனை திறந்து வைப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
ராமாயணத்தில் ராமர் பெயரைச் சொன்னாலே உடனடியாக நினைவுக்கு வருபவர் அனுமன். விவேகானந்த கேந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் பலரது கனவாக இருந்தது. ஆனால், விவேகானந்தர் நினைவு மண்டபமும், கேந்திரமும் ஏக்நாத் ரானடே கண்ட கனவாகும். அந்தக் கனவும் காட்சிகளும் இன்று கண்ணெதிரே விரிவடைந்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக ராமாயண கண்காட்சிக் கூடம், பாரத மாதா கோயில், அனுமன் சிலை ஆகியவை அமைந்துள்ளன.
தேசபிதா மகாத்மா காந்தி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது கண்ட கனவு ராமராஜ்யம். ராஜாஜி எழுதிய ராமாயண விமர்சனத்தில், ராவணனிடம் இருந்து சீதையை காத்து நின்றது அவரது கற்பின் கனல் என்றாலும், அதனைக் கண்ணாக நின்று காத்தது அனுமனே எனக் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் திட்டமிட்டு அமைந்ததல்ல. இயல்பாக அமைந்தவை. இது உணர்வுப்பூர்வமானது. நாட்டையும், நம்மையும் இயக்குவது தெய்வீகமான ஒரு சக்தி. அந்த ஆற்றலைத்தான் நாம் தெய்வமாக வழிபடுகிறோம்.
விவேகானந்தர் பிறந்த நாளில் இந்நிகழ்வு அமைந்துள்ளது மிகவும் பொருத்தமானதாகும். விவேகானந்த கேந்திரம் ஊதியமில்லாத ஆயுள் கால உறுப்பினர்களின் உழைப்பால் வழிநடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பிறந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் எதிர்காலம் குறித்ததாகவே இருந்தது. அவரது கனவுகள் கால ஓட்டத்தில் நிச்சயம் நனவாகும் என்றார் அவர்.
இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், பொதுச்செயலர் பானுதாஸ், பொருளாளர் அனுமந்தராவ், பி.ஆர்.ஓ. ரகுநாதன், மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூன்று மொழிகளில் பேசிய மோடி
பிரதமர் தனது திறப்பு விழா உரையை மாலை 5.15 மணிக்கு தொடங்கி 5.40 மணிக்கு நிறைவு செய்தார்.
முதலில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் எனத் தமிழில் பேசினார்.
தொடர்ந்து ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com