தீப்பிடிக்கும் அபாயம்: பொங்கல் பண்டிகைக்கு வண்டலூர் பூங்கா திறக்கப்படாது: வனத் துறை தகவல்

தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாது என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீப்பிடிக்கும் அபாயம்: பொங்கல் பண்டிகைக்கு வண்டலூர் பூங்கா திறக்கப்படாது: வனத் துறை தகவல்

தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாது என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வர்தா புயலால், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களில் மரங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், கிண்டி சிறுவர் பூங்காவில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் ஜனவரி 6, 7 தேதிகளில் பூங்காவைப் பார்வையிட்டனர்.
அப்போது, புயலால் சேதமடைந்து விழுந்து வெட்டப்பட்டுள்ள மரங்களினால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், இம்மரங்கள் மற்றும் சரகுகளை முற்றிலும் அகற்றி, பார்வையாளர்களின் கட்டமைப்பு வசதிகளைச் சீர்செய்த பின்னர் பூங்காவை திறப்பது பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமென மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகைக்கு பூங்காவை திறக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகிய இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, பார்வையாளர்கள் வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com