பேல்பூரி

முடியலை. வேற வீடு பாத்துக்கிட்டுப் போயிடலாமான்னு கூட தோணுது''"அவ கெடக்கிறா... அவ என்ன?
பேல்பூரி

கண்டது
• (கோவை -  சிங்காநல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் பெயர்)
செருப்படி பாலம்
எஸ்.டேனியல் ஜூலியட், தாதன்குளம்.

• (வந்தவாசி - மேல் மருவத்தூர் சாலையில் ஓர் ஊரின் பெயர்)
கடைசிக்குளம்
வெ.ராம்குமார், வேலூர்.

• (மேட்டுப்பாளையம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் ஓர் உணவகத்தின் பெயர்)
 ஒன்லி காப்பி
 ஏ.ஜே.ராஜமாணிக்கம், குன்னூர்.

• (நெமிலி வட்டம் ஓச்சேரியில் நடந்த ஒரு திருமண விழா பேனரில்)
 கரிவேடு கிராமத்தில் பரபரப்பு!
வாலிபர் கைது!
கைது செய்யும் நாள்: 9.3.17
கைது செய்யும் இடம்: எஸ்.கே.மஹால், ஒச்சேரி
கைது செய்பவர்: எஸ்.சுப்புலட்சுமி
குற்றம்: பெண்ணின் மனதைத் திருடிவிட்டார்
தீர்ப்பு: மூன்று முடிச்சுப் போடுதல்
முக்கிய சாட்சிகள்: நண்பர்கள், கரிவேடு
ஒய்.ராபர்ட், ஓச்சேரி.

கேட்டது
• (நாகர்கோவில் தேநீர்க் கடையில் இளைஞர்கள் இருவர்)
"மாப்ளே... பணமில்லா பரிவர்த்தனை மூலம் ஒரு டீ வாங்கித் தாயேன்''
"நீ என்னைக்கு பணம் தந்து டீ குடித்தாய்? ஓசி டீ வாங்கித்தான்னு கேட்டுத் தொலைக்க வேண்டியதுதானே? பந்தா காட்டாதே மச்சி''
 சு.நாகராஜன், பறக்கை.

• (அரக்கோணம் பேருந்து நிறுத்தத்தில் இரு பெண்களின் உரையாடல்)
"எங்க பக்கத்து வீட்டில் இருக்கிறாளே... கோமளா... அவ தொல்லை தாங்க முடியலை. வேற வீடு பாத்துக்கிட்டுப் போயிடலாமான்னு கூட தோணுது''
"அவ கெடக்கிறா... அவ என்ன? தலையை வெட்டி தபால்லயா போட்டிடுவா? அவளுக்குப் போய் பயந்துக்கிட்டு''
வி.கண்ணகி செயவேலன், அரக்கோணம்.

எஸ்எம்எஸ்
புகழுங்கள்...
ஆனால்...
புகழ்ந்து தள்ளிவிடாதீர்கள்.
எம்.சங்கீதா, பட்டுக்கோட்டை.

அப்படீங்களா!
கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்றவற்றை தோலைச் சீவிவிட்டுத்தான் சமைக்கிறார்கள். இதில் இரண்டு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒன்று, அவசர அவசரமாகச் சமையல் செய்யும் நேரத்தில் இந்த தோல் சீவும் வேலை நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டு டென்ஷனாக்கிவிடுகிறது.
மற்றொன்று, காய்கறிகளில் உள்ள தோலைச் சீவிவிட்டுச் சமைப்பதால் தோலில் உள்ள   நமது உடலுக்குத் தேவையான ஏகப்பட்ட சத்துகளை  வீணாக்கிவிடுகிறோம்.
உருளைக்கிழங்கு தோலில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, சி எல்லாம் உள்ளன.
வெள்ளரிக்காய் தோலில் வைட்டமின் கே உள்ளது.
பீட்ரூட் தோலில், நமது உடலில் சுருக்கம் விழாமல் தடுக்கும் சத்து உள்ளது.
பல காய்கறிகளின் தோலில் வைட்டமின் சி, வைட்டமின் இ உள்ளது. 
நாம் காய்கறிகளின் தோலைச் சீவி குப்பையில் போடுவதால், உடலுக்குத் தேவையான சத்துகளைக் குப்பையில் போட்டுவிடுகிறோம். குப்பையை உடலுக்குள் போடுகிறோம்.
என்.ஜே., சென்னை-69.

யோசிக்கிறாங்கப்பா!
இரண்டாண்டு காதல்
திருமணத்தில் முடிந்தது. 
அவளுக்கு ஐப்பசியில்...
அவனுக்கு கார்த்திகையில்.

ஆர்.சிவானந்தம், 
கோவில்பட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com