கடவுள் - மனிதன் உரையாடல்

கணேஷ் ட்ரீம் ஃபாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பிரம்மா.காம்'. கதாநாயகனாக நகுல் நடிக்கிறார்.
கடவுள் - மனிதன் உரையாடல்

கணேஷ் ட்ரீம் ஃபாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பிரம்மா.காம்'. கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷ்னா ஜாவேரி நடிக்கிறார். இயக்குநர் பாக்யராஜ்,  கெளசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் புருஷ் விஜயகுமார். ஹாலிவுட் சினிமாக்களில் பிரதானமாக இருந்து வரும் ஃபேண்டசி பாணியில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடவுள்-மனிதன் இடையேயான தொடர்பு என்பது, விளங்கி கொள்ள முடியாத ஒன்று. இல்லை என்பவர்களையும் ஒரு கட்டத்துக்குப் பின் தேடி அலைய வைக்க கூடிய மகத்துவம் இறை நம்பிக்கையில் உண்டு. அப்படி எழும் ஒரு சூழலில் மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையேயான உரையாடலை மையமாக கொண்டு இந்த கதைக் கரு அமைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் எல்லாம் வழக்கமான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான பாணியில் தோன்றுவார்கள். "திருவிளையாடல்' படப் பாணியை அநேக இடங்களில் கையாளப்பட்டுள்ளது. சென்னை, பாங்காக், மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  மிலானா கார்த்திகேயன் தயாரிக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com