இஞ்சித் தயிர் 

இஞ்சியில்லாத விருந்து உண்டால் ஏதோ பெரும் விபத்து நேர்ந்துவிட்டதாக நம் மூதாதையர் கருதினார்கள். சரித்திரத்திலும் புராணத்திலும் இஞ்சியின் மேன்மை வர்ணிக்கப்படுகிறது.
இஞ்சித் தயிர் 

இஞ்சியில்லாத விருந்து உண்டால் ஏதோ பெரும் விபத்து நேர்ந்துவிட்டதாக நம் மூதாதையர் கருதினார்கள். சரித்திரத்திலும் புராணத்திலும் இஞ்சியின் மேன்மை வர்ணிக்கப்படுகிறது.

மலையாள இலக்கியத்தில் புகழ்பெற்ற "பறயி பெற்ற பந்திரு குலங்கள்' என்ற கதையைப் படித்தால் கதை ஆரம்பிக்கும்போதே இஞ்சிக் கறியை ஆயிரம் கறிகளுக்குச் சமமாகப் பாவித்து அதைத் தயாரித்துப் பரிமாறும் பெண்ணை வரருவி என்பவன் தன் மனைவியாக்கிக் கொண்டான் என்கிறது.

சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய சக்தி வாய்ந்ததுடன் இஞ்சித் தயிர் குடித்தால் மூல வியாதி நீங்கும் எனவும் மருத்துவத் துறை கண்டறிந்துள்ளது. உணவின் வாயிலாக வயிற்றில் சென்று சேருகின்ற பித்தம், மசாலாக்கள், பழையவை, வேகாதவை முதலியவற்றை ஜீரணிக்கும் சக்தி இஞ்சித் தயிருக்குண்டு.

இஞ்சி, கறிவேப்பிலை, மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து தயிரில் சேர்த்து கலக்கித் தயாரிப்பதே இஞ்சித் தயிராகும். குடலைச் சுத்தமாக்கி உடலை வளர்ப்பதில் இஞ்சிக்கு நிகர் இஞ்சியே!
("நம்பிக்கைகளும் ஆசாரங்களும்' நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com