ராமர் விக்ரகத்தை முதல் வழிபட்ட இடத்தில் கோவில்!

சைதாப்பேட்டை, பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில், இந்த பரபரப்பான பகுதியில் உள்ள ஏராளமான கோயில்களில் ஒன்றாகும்
ராமர் விக்ரகத்தை முதல் வழிபட்ட இடத்தில் கோவில்!

சைதாப்பேட்டை, பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில், இந்த பரபரப்பான பகுதியில் உள்ள ஏராளமான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் சுமார் ஐநூறு முதல் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இது, தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரந்து விரிந்த விஜயநகர சாம்ராஜ்யத்துடன் தொடர்புடையது.
கிருஷ்ணதேவ ராயர், அச்சுத ராயர் போன்ற விஜயநகர ஆட்சியாளர்கள் (கி.பி.16ஆம் நூற்றாண்டு) திருமலையில் (திருப்பதி) குடிகொண்டுள்ள வெங்காசலபதி பக்தர்கள் ஆவர். எனவே வெங்கடாசலபதிக்கு, தமிழ்நாட்டில் கூட ஏராளமான கோயிலை எழுப்பினார்கள். சைதாப்பேட்டையில் உள்ள இந்த விஷ்ணு கோயில் பலிஜா செட்டி சமுதாயத்தினரால் கட்டப்பட்டது. 
பிரதான தெய்வமான பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள், தனது இரு மனைவியரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அதன் அருகிலேயே ராமரின் (ரகுநாதர்) சிறிய சன்னதி உள்ளது. இது, இந்தக் கோயிலில் முதலில் வழிபட்ட விக்ரகம் எனக் கூறப்படுகிறது. ஆகையால், இந்தப் பகுதி ரகுநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ராமர் கோயிலுக்கு எதிரே சிறிது தொலைவில் அடையாறு நதிக்கரையில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் தாயார் அலர்மேல்மங்கை தாயார் என்று அழைக்கப்படுகிறார். தாயாரின் உற்சவ மூர்த்தி, இந்தக் கோயில் கட்டப்படும்போது பூமிக்கு அடியில் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் மாதமான தை மாதத்தின்போது திருவல்லிக்கேணியில் இருந்து பார்த்தசாரதி சுவாமி இந்தக் கோயிலுக்கு வருகை புரிகிறார்.
வருடாந்திர உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் 36 அடி அழகிய மரத் தேர், கோபுரத்தின் அருகில் உள்ளது. அதன் அருகிலேயே ராமானுஜ விஜய விலாசம் (தற்போது "ராமானுஜ கூடம்' என்று அழைக்கப்படுகிறது) என்ற கூடம், 1901-இல் கட்டப்பட்டதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இங்கு ராமர் பட்டாபிஷேகத்தின் அழகிய தஞ்சாவூர் ஓவியம் வழிபடப்படுகிறது.
நிஜ பெயர்: இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி "ரகுநாதபுரம்' என்றழைக்கப்படுகிறது.
உயரமான கோபுரம்: 86 அடி உயரத்தில் 5 அடுக்குகளாக கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
புனித குளம்: இந்த கோயில் குளம் "தாமரை புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. 
கோயில் மடப்பள்ளி: இந்தக் கோயிலின் மடப்பள்ளி 1896-இல் கட்டப்பட்டதாக கட்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
அமைவிடம்: சைதாப்பேட்டை மார்க்கெட்டுக்கு அருகே பெருமாள் கோயில் தெருவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. சுரங்கப்பாதைக்கு மிக அருகிலேயே உள்ளது. இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்றது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் , கோயில் 
- சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: பிரவீண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com